‘சூர்யா 44’: ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும்

1 mins read
aff1fc54-649a-4199-b992-0497faa9fc2f
சூர்யா. - படம்: ஊடகம்

நடிகர் சூர்யா அடுத்து கார்த்திக் சுப்புராஜின் படத்தில் நடிக்க உள்ளார்.

‘சூர்யா 44’ என குறிப்பிடப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கார்த்திக் சுப்புராஜும் சந்தோஷ் நாராயணனும் ஏற்கெனவே இணைந்து பணியாற்றி உள்ளனர்.

இதன் மூலம் முதன்முறையாக சூர்யா நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன். இப்படம் சண்டைக் காட்சிகளும் இதர வணிக அம்சங்களும் கூடிய ஜனரஞ்சகமான படைப்பாக உருவாகுமாம்.

இதனால் சூர்யா ரசிகர்கள் மத்தியில் இப்போதே படம் குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்