துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்துள்ள படம் ‘கருடன்’. இது முழுநீள அதிரடிப் படமாக உருவாகி உள்ளது.
சசிகுமார், சமுத்திரக்கனி, ரேவதி ஷர்மா ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கும்பகோணம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், மே 31ஆம் தேதி இப்படம் வெளியீடு காணும் எனக் கூறப்படுகிறது.