தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் ஜி.வி.பிரகாஷ் திரைப்படங்களிலும் நாயகனாக நடித்து வருகிறார்.
இவரது இசையமைப்பில் தற்போது ‘தங்கலான்’, ‘வணங்கான்’, ‘அமரன்’, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘வீரதீர சூரன்’ உள்ளிட்ட படங்கள் வரிசையாக வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.
இவர், தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்யப்போவதாக ஊடகங்கள், சமூக வலைத் தளங்களில் வதந்தி பரவி வருகிறது.
ஆனால், இத்தகவல் உண்மைதானா அல்லது பொய்த் தகவலா என்பது குறித்து இன்னும் ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி தம்பதியர் வாய் திறக்காமல் உள்ளனர்.
சிறு வயதுமுதல் தன்னுடன் பழகி வந்த பாடகி சைந்தவியை கடந்த 2013ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக புயல் வீசுவதாகக் கூறப்படுகிறது.
ஜி.வி. பிரகாஷ்-சைந்தவி பெற்றோர்களுக்கு இடையேயான மனக்கசப்பே இவர்களது பிரிவுக்கு முக்கியக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
இதனால், கடந்த ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் இவர்கள், விரைவில் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்களாம்.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில் நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், மற்றுமொரு நட்சத்திர ஜோடியும் பிரியும் செய்தியால் கோலிவுட் வட்டாரம் அதிர்ச்சியில் உள்ளது.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி தம்பதியர் விரைவில் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

