பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ள பிரியாலயா

1 mins read
c12f5cb6-7a0a-42dc-baf1-3b1bdf4b515b
பிரியாலயா. - படம்: ஊடகம்

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியாலயா நிச்சயம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்திழுப்பார் எனத் திரையுலக விவரப்புள்ளிகள் கூறுகின்றனர்.

கதாநாயகியாக பிரகாசிக்கும் முன்பே இன்ஸ்டகிராமில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்டுள்ளார் பிரியாலயா.

சிறந்த பரதநாட்டியக் கலைஞரான இவர், அனைவரிடமும் இயல்பாகப் பேசிப் பழகக்கூடியவர். படப்பிடிப்பின்போது சந்தானத்தை முதன்முறையாக நேரில் சந்தித்துப் பேசினாராம்.

அதேபோல் பிரியாலயாவைக் கண்டதும் மும்பை மாடல் அழகி என நினைத்துவிட்டாராம் சந்தானம். அதன் பிறகுதான் உண்மை நிலவரம் தெரியவந்துள்ளது. பிரியாலயா தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இப்படத்தின் மூலம் சந்தானத்துடன் அதிகமாக பேசும் வாய்ப்பு கிடைத்தது என்றும் அவர் அடிக்கடி ஏதாவது நகைச்சுவையாகக் கூறி படப்பிடிப்பு நடக்கும் இடத்தைக் கலகலப்புடன் வைத்திருப்பார் என்றும் கூறுகிறார் பிரியாலயா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்