மீண்டும் கைவிடப்பட்ட ‘குற்றப்பரம்பரை’

மீண்டும் கைவிடப்பட்ட ‘குற்றப்பரம்பரை’

1 mins read
e59054c2-08a1-4d14-9e79-873d7fd8f0cf
சசிகுமார். - படம்: ஊடகம்

‘குற்றப்பரம்பரை’ நாவலை திரைப்படமாக்கும் முயற்சி மீண்டும் கைவிடப்பட்டுள்ளது.

இந்நாவலை திரைப்படமாக எடுக்கப்போவதாக இயக்குநர் பாலா அறிவித்தார். அதற்கு மூத்த இயக்குநர் பாரதிராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தானும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.

எனினும் இரு இயக்குநர்களுமே இந்த முயற்சியின் அடுத்த கட்டம் தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், சசிகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனை நாயகனாக வைத்து ‘குற்றப்பரம்பரை’ கதை இணையத்தொடராக உருவாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும், சத்யராஜ், இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தை இணையத்தொடராக தயாரிக்க முன்வந்த நிறுவனம் இம்முயற்சியைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது. காரணம் எதையும் அந்நிறுவனம் குறிப்பிடவில்லை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்