நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தம் மனைவியும் பாடகியுமான சைந்தவியைப் பிரிவதாகத் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், “இருவரும் மனம் ஒத்துப் பிரிந்து வாழ முடிவு செய்யப்பட்டுள்ளது,” என ஜி.வி.பிரகாஷ் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, தங்களின் 11 ஆண்டுகால மணவாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது என்றும் தங்கள் எதிர்காலத்தை கருத்தில்கொண்டும் தங்களது மன அமைதிக்காகவும் இம்முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

