இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தி நடிகர் சல்மான் கானை வைத்து ‘சிக்கந்தர்’ என்னும் படத்தை இயக்குகிறார்.
அந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியானது. ‘சிக்கந்தர்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘அனிமல்’ படத்துக்குப் பிறகு மீண்டும் இந்திப் படத்தில் களமிறங்கியுள்ளார் ராஷ்மிகா.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.