மலையாளத்தில் களமிறங்கும் கெளதம் மேனன்

மலையாளத்தில் களமிறங்கும் கெளதம் மேனன்

1 mins read
4e961b14-777c-4a10-a447-17efa3266e54
கெளதம் மேனன் - படம்: ஊடகம்

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழ்கிறார் மம்முட்டி. அவர் தற்போது ‘டர்போ’ என்னும் மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.

நகைச்சுவை படமான ‘டர்போ’வை மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கிறது. இம்மாதம் 23ஆம் தேதி அப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் மம்முட்டி அவரது அடுத்த படத்திற்குத் தயாராகியுள்ளார். ஆனால், அவரை இயக்க மலையாள இயக்குநர்கள் தயாராக இல்லை.

அதனால் தமிழ் திரையுலகில் பிரபலமாக உள்ள கெளதம் மேனன் மம்முட்டியை வைத்து இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்து படத்தை மம்முட்டியே தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்