திரைப்படங்கள் போலவே இணையத்தொடர்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதனால் முன்னணி நடிகர்கள் பலர் இணையத்தொடர்களில் நடித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் பரத், ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் ‘தலைமைச் செயலகம்’ என்ற இணையத்தொடரில் நடித்துள்ளனர். இதில் கிஷோர், தர்ஷா குப்தா, சந்தான பாரதி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.
இந்தத் தொடரை தேசிய விருது பெற்ற பட இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார். அரசியல் கதையம்சத்தில் உருவாகி உள்ளது.
“இணையத்தொடர் சிறப்பாக வந்துள்ளது. தடைகளைத்தாண்டி பெண்கள் அரசியலில் பங்குபெற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது,’‘ என்று ராதிகா தெரிவித்துள்ளார்.

