தற்போது கங்குவா படத்தில் நடித்து வரும் சூரியா அடுத்ததாக தனது 44 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், சூர்யா 44 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

