சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தற்போது வெற்றிகரமான நடிகராக வலம் வருகின்றார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று ஓர் தனி இடமிருக்கிறது.
கலகலப்பான நகைச்சுவைப் படங்களில் தொடர்ந்து நடித்து சிறந்த பொழுதுபோக்கு நடிகர் என பெயர் வாங்கிய சிவகார்த்திகேயன் தற்போது வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்தே இப்படம் உருவாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்து வரும் அவர் மேலும் ஒரு முன்னணி இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சுதா கொங்காரா சூர்யாவை வைத்து புறநானூறு என்ற படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் அப்படம் தற்போதைக்கு நடைபெறாத நிலையில் வேறொரு நடிகரை வைத்து படமெடுக்கலாம் என முயற்சியில் இறங்கியுள்ளார். இந்தச் செய்தியை அறிந்த சிவகார்த்திகேயன், சுதா கொங்காராவின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

