குறைந்த செலவில் தயாராகும் படங்களில் நடித்து நல்ல பெயர் சம்பாதித்து வருகிறார் நடிகர் கவின்.
அவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஸ்டார்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
எனினும் வசூல் ரீதியில் பட விநியோகிப்பாளர்களுக்கு நல்ல லாபமாம்.
இதனால் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் கவின்.
இந்நிலையில் நடை, உடை, பாவனைகளில் நடிகர் விஜய்யை அப்பட்டமாக பின்பற்றத் தொடங்கியுள்ளார் கவின்.
அவருக்கு ரசிகர் மன்றங்களைத் தொடங்க சிலர் முன்வந்திருப்பது கோடம்பாக்கம் பிரமுகர்களை புருவம் உயர்த்த வைத்துள்ளது.
ஒருவகையில் கவினும் கூட இதை எதிர்பார்க்கவில்லையாம். எனினும் ரசிகர்களுக்கு இவர் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை.
தற்போது முன்னணி இயக்குநர்களின் பார்வையும் கவின் பக்கம் திரும்பி உள்ளது. இதுகுறித்து அவர் வாய் திறப்பதாக இல்லை. எனினும், மிக விரைவில் அவர் நடிக்கும் புதுப்படங்கள் தொடர்பான அறிவப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

