பலத்த போட்டிகளுக்கு இடையே தெலுங்கில் முதல் நிலை நடிகையாக நீடித்து வருகிறார் ராஷ்மிகா.
இவருக்கு இந்தி திரையுலகிலும் நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தில் ராஷ்மிகாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். அடுத்த ஆண்டு பக்ரீத் பண்டிகையின் போது இந்தப்படம் திரைகாண உள்ளது.
“வெறும் கவர்ச்சிப் பொம்மையாக திரையில் தோன்றுவதில் எனக்கு விருப்பம் குறைந்து வருகிறது.
“இந்தி ரசிகர்கள் நாயகிகளின் கவர்ச்சியையும் நடனத்திறமையையும் எந்த அளவுக்கு ரசிக்கிறார்களோ, அதற்கு இணையாக நல்ல நடிப்பையும் எதிர்பார்க்கிறார்கள். எனவே இந்தித் திரையுலகில் எனக்கான இடத்தைப் பிடிப்பேன்,” என்கிறார் ராஷ்மிகா.