சுந்தர்.சி இயக்கியுள்ள ‘அரண்மனை 4’ படத்தை இந்தியில் வெளியிட உள்ளனர்.
அண்மையில் வெளியீடு கண்ட இப்படம், இதுவரை ரூ.70 கோடி வசூல் கண்டுள்ளது.
இதையடுத்து வரும் 24ஆம் தேதி இந்தியில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் நாயகிகளாக நடித்துள்ள தமன்னாவும் ராஷி கன்னாவும் இந்தி ரசிகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்பதால் அவர்களை முன்னிலைப்படுத்தி இந்திப் பதிப்பை விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

