ஹாலிவுட் தொடரில் நடிக்கும் தபு

ஹாலிவுட் தொடரில் நடிக்கும் தபு

1 mins read
b5865a80-957a-4a24-b9b1-2b7c2ab298b7
நடிகை தபு. - படம்: ஊடகம்

இந்தி நடிகை தபு ஹாலிவுட்டில் உருவாகும் இணையத்தொடரில் நடித்து வருகிறார். ‘டியூன்’ என்ற தலைப்பில் உருவாகும் அத்தொடர், திகிலும் மர்மங்களும் கொண்ட கதைக்களத்துடன் தயாராகிறது.

“மனித குலத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் சக்திகளை எதிர்த்துப் போராடும் இரண்டு சகோதரிகளைப் பற்றிய கதை இது. ‘சிஸ்டர் டி ப்ரான்சிஸ்கா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

“இதுபோன்ற மாறுபட்ட கதைக்களங்கள் அமையும்போது உற்சாகமாக இருக்கிறது,” என்கிறார் தபு.

இவர் தமிழில் ‘காதல் தேசம்’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’, ‘இருவர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்