ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தில் அவருக்கான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாம்.
ஞானவேல் இயக்கும் இப்படம், குறித்த தேதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் ரஜினி.
அதற்கான படப்பிடிப்பு தொடங்கும் முன்பு சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளதால் தமக்கான காட்சிகளை வேகமாக எடுக்குமாறு ஞானவேலிடம் கேட்டுக்கொண்டாராம் ரஜினி.
அவரது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அவருடன் தொடர்புள்ள அனைத்து காட்சிகளையும் முடித்து ரஜினியை நிம்மதியாக அனுப்பி வைத்துள்ளது ‘வேட்டையன்’ படக்குழு. மற்ற காட்சிகளையும் பத்து நாள்களுக்குள் முடிக்கத் திட்டமாம்.
இந்நிலையில், இயக்குநர் ஞானவேலின் திட்டமிட்ட செயல்பாடு தம்மை வெகுவாகக் கவர்ந்துள்ளதாகப் பாராட்டியுள்ளார் ரஜினி.

