நடிகை டாப்சி மும்பை மாநகரில் ஆட்டோவில் சென்றபோது எடுக்கப்பட்ட சில காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
அவர் தனது தோழியுடன் ஆட்டோவில் செல்வதைக் கண்ட பல ரசிகர்கள், தங்களுடைய இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்துள்ளனர்.
எப்படியாவது தன்னிடம் பேசிவிட வேண்டும் என்ற முனைப்புடன் பின்தொடர்ந்த ரசிகர்கள் மிக வேகமாக இருசக்கர வாகனத்தில் வருவதைக் கண்டு பதறிப்போனார் டாப்சி.
இதையடுத்து அந்த ரசிகர்களை நோக்கி, “தயவு செய்து வாகனத்தில் மெதுவாகச் செல்லுங்கள். கவனமாக ஓட்டுங்கள். விபத்தில் சிக்கிவிடப் போகிறீர்கள்,” என்று அக்கறையுடன் பேசும் காட்சி அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளது.
மனித உயிர் விலைமதிப்பற்றது என்றும் தனது ரசிகர்களுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என ரசிகர்களிடம் வலியுறுத்தி உள்ள டாப்சி, தற்போது ‘ஹோ லட்கி ஹாய் கஹான்’, ‘ஹசீன் தில்ருபா - 2’, ‘கெல் கெல் மெயின்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.