அதர்வா நடிக்கும் படத்தில் இணையும் நிஹாரிகா

அதர்வா நடிக்கும் படத்தில் இணையும் நிஹாரிகா

1 mins read
972a6df4-7ba7-4bc4-bed7-f1a2a635aa6d
நிஹாரிகா. - படம்: ஊடகம்

சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாகி உள்ள நிஹாரிகா, தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.

நடிகர் அதர்வா நாயகனாக நடிக்கும் புதுப்படத்தில் நிஹாரிகாதான் நாயகி.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

நிஹாரிகா சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ஆயிரக்கணக்கானோர் இவரைப் பின்தொடர்கின்றனர்.

கதைப்படி அமெரிக்காவில் வசிக்கும் பெண்ணாக நடிக்கிறார் நிஹாரிகா.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை அமெரிக்காவில்தான் படமாக்கி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்