அனைத்துப் படங்களுக்கும் கதாநாயகி இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்கிறார் நடிகை நிகிலா விமல்.
அண்மையில் வெளியீடு கண்ட சில படங்கள், கதாநாயகி இல்லாமலேயே வெற்றி பெற்றதாகச் சுட்டிக்காட்டுகிறார் அவர்.
“எத்தகைய பாத்திரமாக இருந்தாலும், வலிய திணிக்கப்படும் போது ரசிகர்களின் ஆதரவு கிடைப்பதில்லை. படத்தின் வெற்றியையும் அது பாதிக்கும்.
“இது வணிக அம்சங்கள் நிறைந்த படங்களுக்கும் பொருந்தும்,” என்கிறார் நிகிலா.

