சூரிய நமஸ்காரம், யோகா என உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டி வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தனது தோட்டத்தில் தலைகீழாக நின்றபடி யோகா செய்யும் காணொளியை வெளியிட்டுள்ளார். அவருக்கு அருகே அவரது செல்ல நாய்க்குட்டியும் அமைதியாக நின்றுகொண்டு உள்ளது.
புதிதாக அவர் வெளியிட்டுள்ள இந்தக் காணொளி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாகவே சிரசாசனம் எனப்படும் தலைகீழாக நின்று செய்யும் யோகாவை பலரும் ஒரு அறைக்குள் இருந்துகொண்டு சுவற்றின் உதவியோடு செய்வதுதான் வழக்கம்.
ஆனால், ‘நான் கடவுள்’ ஆர்யாவைப் போல் வெட்டவெளியில் தோட்டத்தில் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்யும் காணொளியை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’ என வரிசையாக இவரது நடிப்பில் பல படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.

