திடீரென சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா

திடீரென சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா

1 mins read
86390e22-8035-4c8e-bd60-ae9a855b075d
ராஷ்மிகா மந்தனா. - படம்: ஊடகம்

புதுப்படம் ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ராஷ்மிகா பெரும் தொகையை ஊதியமாக கேட்டதாகவும், இதனால் படத்தின் தயாரிப்புத்தரப்பு முடிவு எடுக்க இயலாமல் தடுமாறுவதாகவும் கூறப்படுகிறது.

படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் அண்மையில் நடித்த படங்கள் நூறு கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளன.

எனவே, அவரது ஊதியம் கணிசமாக உயர்ந்திருக்கும் என்ற யூகத்தில் ராஷ்மிகாவும் தனது ஊதியத்தை உயர்த்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

யூகத்தின் அடிப்படையில் எல்லாம் இவ்வாறு செய்யக்கூடாது என சிலர் அறிவுறுத்தியதை அவர் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

எனினும், ராஷ்மிகாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துமாறு தயாரிப்பு நிறுவனத்துக்கு சிவகார்த்திகேயன் அறிவுறுத்தினாராம்.

அதன்படி, தயாரிப்புத்தரப்பு அவரிடம் தொடர்ந்து பேசி வருவதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்