‘ரசிகர்கள் பார்க்க வேண்டிய மூன்று திரைப்படங்கள்’

1 mins read
4f5c91d7-0bf1-499f-8d21-cc66f5c5ee55
சோபிதா துலிபாலா. - படம்: ஊடகம்

அண்மையில் வெளியீடு கண்ட மூன்று படங்களை சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்று நடிகை சோபிதா துலிபாலா கேட்டுக் கொண்டுள்ளார்.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’, ‘மங்கி மேன்’, ‘பிரம்மயுகம்’ ஆகியவைதான் அந்த மூன்று படங்களாகும்.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ அண்மையில் வெளியீடு கண்டு பெறும் வெற்றி பெற்றுள்ளது.

ஹாலிவுட் படைப்பான ‘மங்கி மேன்’ படத்தில் சோபிதா நடித்துள்ளார். ‘பிரம்மயுகம்’ மம்முட்டி நடிப்பில் உருவாகி உள்ளது.

“மூன்று படங்களில் ‘பிரம்மயுகம்’ படம்தான் திரையில் அச்சமூட்டும் வகையில் இருந்தது. எனினும் மூன்று பேர் சேர்ந்து படம் பார்த்ததால் பயப்படவில்லை,” என்கிறார் சோபிதா.

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த பிறகு தமக்கான வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருவதாகச் சொல்லும் சோபிதா, கனவுப் படம், முதல் நிலை கதாநாயகி என்றெல்லாம் எந்தவிதமான இலக்குகளையும் தாம் நிர்ணயித்துக்கொள்ளவில்லை என்கிறார்.

அதேசமயம் கிடைத்த வாய்ப்புகளில் தனது நடிப்பு பிறரால் பாராட்டப்படும் அளவுக்கு இருக்கும் என்கிறார் சோபிதா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்