மலையாள நடிகைகளுக்கு எப்போதுமே தமிழில் மவுசு அதிகம்தான்.
இதுநாள் வரை தமிழில் கோலோச்சி வந்த நயன்தாராவும் மலையாள நடிகைதான். எனினும் தற்போது அவருக்கு மவுசு குறைந்து வருகிறது.
இந்நிலையில், அவருக்கு அடுத்தபடியாக ‘பிரேமலு’ பட நாயகி மமிதா பைஜு, ‘குருவாயூர் அம்பலநடை’ பட நாயகி அனஸ்வரா ராஜன் ஆகிய இருவரும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர்.
மமிதா தமிழில் வெளியான ‘ரெபல்’ படத்திலும் அனஸ்வரா ‘ராங்கி’ படத்திலும் நடித்துள்ளனர். இருவரது நடிப்பையும் சமூக ஊடகங்களில் தமிழ் ரசிகர்கள் புகழ்ந்துள்ளனர்.