இதுவரை நடித்ததிலேயே சவாலான பாடல் காட்சி: சங்கர் பட அனுபவங்களைப் பகிரும் கியாரா

இதுவரை நடித்ததிலேயே சவாலான பாடல் காட்சி: சங்கர் பட அனுபவங்களைப் பகிரும் கியாரா

1 mins read
ff74c760-a879-44da-b11c-0ee4553a1075
‘கேம் சேஞ்சர்’ படத்தில் இடம்பெறும் ‘ஜரகண்டி’ எனத் தொடங்கும் பாடல் காட்சி. - படம்: ஊடகம்

சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் நாயகனாக நடிக்கும் படம் ‘கேம் சேஞ்சர்’.

இதில் இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘ஜரகண்டி’ என்ற பாடலை அண்மையில் வெளியிட்டனர். இதுவரை தான் நடித்ததிலேயே ஆக சவாலான பாடல் காட்சி இதுதான் என்கிறார் கியாரா அத்வானி.

“இந்தப் பாடலுக்காக பத்து நாள்கள் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குநர் சங்கர். இதுவரை எந்தப் பாடலுக்கும் நான் இவ்வாறு 10 நாள்கள் படப்பிடிப்பில் பங்கேற்றதில்லை. அதுவே பெரிய சவால்தான்.

“இப்பாடலுக்கு நடனம் அமைத்தது பிரபுதேவா என்பது இன்னும் பெரிய சவாலாக அமைந்தது. இப்பாடலில் சில கடினமான நடன அசைவுகள் இருந்தன. பயிற்சி பெற்ற பிறகே ஒத்திகை பார்த்து, படப்பிடிப்பில் பங்கேற்றேன்.

“ஒவ்வொரு பாடலையும் வித்தியாசமாகப் படமாக்குவதில் இயக்குநர் சங்கர் கைதேர்ந்தவர். வணிக ரீதியிலான படங்களின் மூலம் தனித்துவமான அனுபவங்களை உருவாக்குபவர். தனது முந்தைய படங்களைவிட அடுத்த படைப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என நினைக்கும் படைப்பாளி.

“அவரது அர்ப்பணிப்பையும் அணுகுமுறையையும் கண்டு வியந்து போனேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பம் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் மூலம் நனவாகி உள்ளது,” என்கிறார் கியாரா அத்வானி.

குறிப்புச் சொற்கள்