கவர்ச்சியாக உடை அணிவது தமது தனிப்பட்ட விருப்பம் என நடிகை அனிகா சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
சந்தையில் அறிமுகமாகும் புதிய ஆடைகளை அணிவதில் தமக்கு அதிக நாட்டம் உண்டு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“என்ன மாதிரியான உடைகளை அணிந்தாலும், ஒரு தரப்பினர் குறை சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இது மனதளவில் என்னைப் பாதிக்கிறது.
“என்னைப்பற்றித் தவறாக விமர்சிப்பவர்கள், நானும் ஒரு சராசரி பெண் என்பதை மனதில்கொள்ள வேண்டும். திரைத்துறையில் ஈடுபட்டுள்ள பெண்கள்தான் இத்தகைய தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள்,” என்றும் அனிகா மேலும் கூறியுள்ளார்.

