அண்மையில் வெளியான ‘பார்க்கிங்’ படத்திற்கு விமர்சன, வசூல் ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதில் ஹரிஷ் கல்யாணும் இந்துஜாவும் நாயகன், நாயகியாக நடித்திருந்தனர். எம்.எஸ்.பாஸ்கர் நடிப்புக்குப் பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில், இப்படத்தை ஐந்து மொழிகளில் மறுபதிப்பு செய்யும் முயற்சி தொடங்கி உள்ளது.
மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரு வெளிநாட்டு மொழி என ஐந்து மொழிகளில் இப்படத்தை மறுபதிப்பு செய்வதற்கான உரிமம் நல்ல தொகைக்கு விற்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.