சிம்புவுடன் இணையும் இரண்டு இந்தி நாயகிகள்

சிம்புவுடன் இணையும் இரண்டு இந்தி நாயகிகள்

1 mins read
25833900-3f50-48e0-994e-0e59e05ce60f
சிம்பு. - படம்: ஊடகம்

சிம்பு நடிப்பில் உருவாகும் அவரது 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவது தெரியும். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்துக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக இருப்பதால் விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளனர்.

இந்நிலையில், சிம்பு இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் இதனால் இரண்டு நாயகிகளை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

“இந்தியில் முன்னணியில் உள்ள கியாரா அத்வானி, ஜான்வி கபூர் ஆகிய இருவரும்தான் சிம்புவுடன் இணைய உள்ளனர்.

“இப்படத்தில் நாயகன், வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார் சிம்பு. இரு தோற்றங்களும் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது,” என கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்