‘ராயன்’ படத்தில் கானா பாடல்; பாடி அசத்தியுள்ள ரகுமான்

1 mins read
c19acd08-3846-407b-9551-3f8339c23f33
தனுஷ். - படம்: ஊடகம்

‘ராயன்’ படத்தின் இரண்டாவது பாடலை மே 24ஆம் தேதி வெளியிடுகின்றனர். தனுஷ் நடித்து, இயக்கி உள்ள படம் இது. மேலும், அவரது 50வது படமும் இதுதான்.

இதை மனத்திற்கொண்டு நல்ல மெட்டுக்களுடன் பாடல்களைத் தந்துள்ளாராம் ஏ.ஆர்.ரகுமான்.

இன்று வெளியாகும் இரண்டாவது பாடல் கானா வகையைச் சேர்ந்தது என்றும் ரகுமானே பாடியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள ஒரு சுவரொட்டியில் இப்படத்தில் நடிக்கும் சந்தீப் கிஷனும் அபர்ணா பாலமுரளியும் மிதிவண்டியில் வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

எனவே, இவர்கள் இருவரும்தான் இந்தப் பாடலில் நடித்திருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். பாடலைக் கேட்கவும் ஆவலாக உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்