மக்கள் எல்லோரும் தன்னைத் தங்களது மகள்போல் பார்த்துக்கொள்கின்றனர் என்றும் அதற்குக் காரணம் தனது அம்மாதான் என்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கூறியுள்ளார்.
2018ஆம் ஆண்டு ‘தடக்’ திரைப்படம் மூலம் ஆரம்பித்தது இவரது பாலிவுட் திரையுலகப் பயணம். இன்று பல படங்களில் ஒப்பந்தமாகி பாலிவுட்டில் முன்னணி நடிகையாகி உள்ளார்.
‘தேவரா’ படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகி உள்ளவர், தமிழ்ப் படத்தில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறார்.
இந்நிலையில், மும்பையில் நடந்த படநிகழ்ச்சியில் ஜான்வி கபூர் பேசும்போது, “என்னைப் பார்க்கும் எல்லோரும் உன் அம்மா ஸ்ரீதேவி மாதிரி அழகாக இருக்கிறாய். அவரது சாயலுடன் பிறந்து இருக்கிறாய் எனச் சொல்கிறார்கள். இன்னும் சிலர் ‘புதிய தலைமுறை ஸ்ரீதேவி’ என்கிறார்கள்.
“இதையெல்லாம் கேட்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தெலுங்கில் ‘தேவரா’ படப்பிடிப்பில் எல்லோரும் என்னை ஒரு மகள் போல் பார்த்துக்கொண்டனர். அதற்குக் காரணம் என் அம்மா மீது அவர்கள் வைத்துள்ள மதிப்புதான்.
“எனது அம்மா முன்னணி நடிகையாக இருந்தவர் என்பதால் என்மீது எல்லோரும் காட்டும் பாசம் என்னை மெய்மறக்கச் செய்கிறது,’’ என்று நெகிழ்ந்துள்ளார் ஜான்வி கபூர்.

