ரஜினிக்குத் ‘தங்க விசா’ வழங்கிய அபுதாபி

ரஜினிக்குத் ‘தங்க விசா’ வழங்கிய அபுதாபி

1 mins read
412eac3a-0938-482e-887e-2f5767d2511b
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கான ‘தங்க விசா’வைப் பெற்றுக்கொள்ளும் நடிகர் ரஜினிகாந்த் (நடுவில்). - படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் கலாசார, சுற்றுப்பயணத் துறை, நடிகர் ரஜினிகாந்திற்குத் ‘தங்க விசா’ எனப்படும் சிறப்பு விசாவை வழங்கிச் சிறப்பித்துள்ளது .

வெளிநாட்டுத் திறனாளர்கள், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நீண்டகாலம் தங்கிப் படிப்பதற்கும் வேலைசெய்யவும் இந்த விசா வகைசெய்யும் என்று ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அரசாங்க இணையத்தளம் கூறுகிறது.

முதலீட்டாளர்கள், தொழில்முனைவர்கள், அறிவியலாளர்கள், சிறப்புத் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள், மனிதநேய நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னோடிகள், முன்னணித்துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்றோர் போன்றோர் இந்த விசாவிற்குத் தகுதி பெறுவர்.

தங்க விசா வழங்கிச் சிறப்பித்த அபுதாபி அரசாங்கத்திற்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இதன் தொடர்பில், லுலு குழுமத்தின் நிர்வாக இயக்குநர் யூசுஃப் அலிக்கும் ரஜினி நன்றி தெரிவித்தார்.

திரு யூசுஃபின் முன்னிலையில், அபுதாபி நிர்வாக மன்ற உறுப்பினரும் அபுதாபி அரசாங்கத்தின் கலாசார, சுற்றுப்பயணத் துறைத் தலைவருமான முகமது கலிஃபா அல் முபாரக் ‘தங்க விசா’வை அவருக்கு வழங்கினார்.

இதுகுறித்தக் காணொளியைச் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்
ரஜினிகாந்த்ஐக்கிய அரபு சிற்றரசுகள்விசா