மூன்று நடிகர்களுக்கும் திருமணம் முடிந்த பிறகுதான் எனக்குத் திருமணம்: விஷால்

1 mins read
c415de80-e1bc-435a-8f6e-0c894130c133
விஷால். - படம்: ஊடகம்
multi-img1 of 4

நடிகர் விஷாலுக்கு தற்போது 46 வயதாகிறது. ஆனால், இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். நடிகர் சங்கக் கட்டடத்தின் திறப்புவிழாவுக்குப் பின்னர்தான் தனது திருமணம் நடைபெறும் என அவர் ஏற்கெனவே பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறார்.

அண்மையில் அளித்துள்ள பேட்டியில்கூட தனது கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றியபின்னரே திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “மூன்று நடிகர்களுக்குத் திருமணமான பின்னரே தனது திருமணம் நடக்கும்,” என்று தெவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்ட அந்த மூன்று நடிகர்கள் சல்மான் கான், சிம்பு, பிரபாஸ் எனக் கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இப்போது 58 வயதாகிவிட்டதால் அவர் இனிமேல் திருமணம் செய்து கொள்வாரா என்பதே பெரும் சந்தேகம்தான். அதேபோல் நடிகர் சிம்புவுக்கு தற்போது 41 வயதாகும் நிலையில் அவரது வீட்டில் பெண் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தகுந்த பெண் கிடைத்தவுடன் திருமணம் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் 44 வயதாகும் பிரபாஸ் அண்மையில், தனது சமூக வலைத்தளத்தில் தனது வாழ்க்கையில் ஒரு புதிய உறவு உருவாகப் போவதாகக் கூறியிருப்பதை அடுத்து அவரது திருமணம் மிக விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விஷால் குறிப்பிட்ட மூன்று நடிகர்களுக்கும் திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், விஷாலின் திருமணம் நடக்குமா என்பது கேள்விக்குறிதான் என கோலிவுட் வட்டாரத்தினர் கிசுகிசுத்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்