தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாய் பல்லவி நடிக்கும் ராமாயணம் படப்பிடிப்பு நிறுத்தம்

1 mins read
beffcb40-15f4-4c45-8311-4f0773a41432
ராமாயணம் படக் காட்சி. - படம்: ஊடகம்

‘ராமாயணம்’ படம் மூன்று பாகங்களாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது. அண்மையில் இப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்தன.

இந்நிலையில், காப்புரிமை பிரச்சினை காரணமாக ‘ராமாயணம்’ படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

‘ராமாயணம்’ படத்துக்கான காப்புரிமை தங்களிடம் உள்ளது என்றும் அதை மீறி யாரும் படத்தை எடுக்கக் கூடாது என்றும் தயாரிப்பாளர் மது மண்டேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், ‘ராமாயணம்’ படக்குழுவினருக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளார்.

இதனால் ‘ராமாயணம்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணம்’ கதையை மையமாக வைத்து தயாராகும் புதிய படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, அனுமனாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யஷ் ராவணனாக வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்