மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை மையமாக வைத்து உருவாகும் ‘அஞ்சாமை’

1 mins read
e6c683ba-add5-4044-8e99-5ca6e7b1ff39
‘அஞ்சாமை’ படத்தில் விதார்த், வாணி போஜன். - படம்: ஊடகம்

மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை மையமாக வைத்து உருவாகி உள்ளது ‘அஞ்சாமை’ திரைப்படம்.

இதில் விதார்த், வாணி போஜன் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் சுப்பு ராமன் இயக்குகிறார். அண்மையில் வெளியீடு கண்ட இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘நீட்’ தேர்வை மையப்படுத்தும் கதை என்பதால் படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது எனும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

‘நீட்’ தேர்வை அறிமுகப்படுத்திய பின்னர் பல்வேறு மாநிலங்களின் கல்வி முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். மற்றொரு தரப்பு இத்தேர்வுக்கு ஆதரவாக உள்ளது.

மேலும், மாணவர்கள் மத்தியிலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இப்படத்தில் நியாயமான முறையில் காட்சிப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் சுப்புராமன்.

இவர், இயக்குநர்கள் மோகன் ராஜா, லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்