புதிதாக யாரையும் காதலிக்கவில்லை: ஷ்ருதி

1 mins read
98ac16d4-258e-4dd9-aeac-c4d09851a01d
ஷ்ருதி. - படம்: ஊடகம்

தற்போதைய சூழலில் தாம் தனிமையில் இருப்பதையே விரும்புவதாகச் சொல்கிறார் நடிகை ஷ்ருதிஹாசன்.

அண்மையில் தனது காதலரைப் பிரிந்துவிட்டதாக இவர் அறிவித்திருந்தார். அதன் பிறகு பொதுவெளியில் இவரை அதிகம் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில், இன்ஸ்டகிராம் மூலம் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார் ஷ்ருதி. அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

அப்போது, தற்போதைய சூழலில் தாம் யாரையும் புதிதாகக் காதலிக்கவில்லை என்றும் தனது வழக்கமான பணிகளில் முழுக் கவனத்தையும் செலுத்த நல்ல வாய்ப்பு அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார் ஷ்ருதி.

மேலும், இவ்வாறு செயல்படும்போது கூடுதல் மகிழ்ச்சி கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காதலரைப் பிரிந்த பின்னர் இசைத்துறையில் கவனம் செலுத்துகிறார் ஷ்ருதி.

அண்மையில், ‘இனிமேல்’ என்ற இசைத்தொகுப்பை அவர் வெளியிட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்