கார்த்தி நடிப்பில் உருவாகும் புதுப் படத்துக்கு ‘மெய்யழகன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜப்பான்’ படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், அவரது 27வது படத்தை பிரேம்குமார் இயக்குகிறார். இவர், விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படத்தை இயக்கியவர்.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் ஆகியோரும் உள்ளனர். இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.
‘மெய்யழகன்’ என்ற தலைப்பு கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளதாக கார்த்தி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.