ஊதியத்தை உயர்த்தி அதிர்ச்சி அளித்த நயன்தாரா

ஊதியத்தை உயர்த்தி அதிர்ச்சி அளித்த நயன்தாரா

1 mins read
61a3011f-bd32-4532-be6c-b7e7dd8675f8
நயன்தாரா. - படம்: ஊடகம்

வாய்ப்புகள் குறைந்துவிட்டன, ரசிகர் கூட்டம் குறைந்து வருகிறது என்றெல்லாம் நயன்தாராவை மையப்படுத்தி சில தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் இவற்றை எல்லாம் அவர் கண்டு கொள்வதே இல்லை.

இந்நிலையில், தனது ஊதியத்தை அவர் 12 கோடி ரூபாயாக உயர்த்திவிட்டதாக ஒரு தகவல் வெளியாகிறது. இதனால் தயாரிப்புத் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இத்தனைக்கும், அண்மையில் வெளியான அவரது படங்கள் எதுவும் வசூலைக் குவித்துவிடுவதில்லை.

பிறகு ஏன் ஊதியத்தை உயர்த்தினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

“முன்பு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டார். இப்போது பட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். அதனால்தான் இந்த ஊதிய உயர்வு,” என நயன்தாரா தரப்பில் விளக்கம் தரப்படுகிறதாம்.

குறிப்புச் சொற்கள்