தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’

1 mins read
f396dd79-d243-4a60-b14a-e65f4a842562
கார்த்தி. - படம்: ஊடகம்

கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்து நடிக்கும் இரு படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முதலில் அவர் நடிக்கும் ‘மெய்யழகன்’ படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியை அதன் தயாரிப்பாளர் வெளியிட்டார்.

இந்நிலையில், ‘வா வாத்தியார்’ என்ற படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், காலஞ்சென்ற தமிழக முதல்வர் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக நடிக்கிறார் கார்த்தி.

இதையடுத்து எம்ஜிஆர் வேடமிட்ட பலர் சூழ்ந்திருக்க, நடுவில் கார்த்தி நிற்கும் சுவரொட்டி வெளியாகி உள்ளது.

இதனால் கார்த்தி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்