சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி

சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி

1 mins read
f692a7f9-2081-40f3-b4b8-1bb982db815e
ஜான்வி கபூர். - படம்: ஊடகம்

அண்மைய பேட்டி ஒன்றில் முதன்முறையாக சாதிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.

“வரலாற்றில் எந்தக் காலகட்டத்திற்குச் செல்ல விருப்பப்படுகிறீர்கள்?” என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “மகாத்மா காந்திக்கும் சட்டமேதை அம்பேத்கருக்கும் இடையில் இருந்த சாதி குறித்த பார்வைகளையும் கருத்துகளையும் விவாதங்களையும் காண ஆசைப்படுகிறேன். இருவரும் இந்திய சமூகத்திற்கு பெரிய பங்களிப்பைச் செய்தவர்கள்,” என்றார் ஜான்வி.

சமூகத்திலுள்ள சாதிப் பிரச்சினைகளை மூன்றாம் நபரின் கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பதற்கும் அந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், தாம் படித்த பள்ளியிலும் வீட்டிலும் சாதி குறித்த உரையாடல்கள் நிகழ்ந்ததே இல்லை என்றார்.

குறிப்புச் சொற்கள்