சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.
இதையடுத்து படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார் சிவா.
‘அமரன்’ படத்தின் முக்கியமான காட்சிகள் பெரும்பாலும் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இப்படம் உருவாகி உள்ளது.
இந்நிலையில், படக்குழுவினருக்கு அளித்த விருந்தின்போது சிவகார்த்திகேயனே தன் கையால் அனைவருக்கும் உணவு பரிமாறினார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

