தமக்கு ஏதும் நேரவில்லை என்றும் தாம் நலமாக இருப்பதாகவும் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை பார்வதி நாயர்.
அவரது இந்த திடீர் பதிவுக்கு காரணம் உள்ளது.
தமிழில் தற்போது ‘ரூபம்’, விஜய்யின் ‘கோட்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் பார்வதி.
கடந்த சில ஆண்டுகளாக சமூக ஊடகத் தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் இவரை லட்சக்கணக்கானோர் பின்பற்றி வருகின்றனர்.
ரசிகர்களுக்காக அவ்வப்போது கவர்ச்சிப் படங்கள், தகவல்களை வெளியிடுவார் பார்வதி.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக எந்தப் பதிவையும் அவர் வெளியிடவில்லை. இதனால் கவலையடைந்த ரசிகர்கள், அவரது நலன் குறித்து விசாரித்த வண்ணம் இருந்தனர். இதனால் நெகிழ்ந்து போயுள்ளார் பார்வதி.
இதையடுத்து, “நான் இன்னும் உயிருடன்தான் உள்ளேன். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு மிக்க நன்றி,” என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் பார்வதி.
பட வாய்ப்புகள் இல்லாததால் அவர் துபாயில் உள்ள தனது குடும்பத்தாருடன் பொழுதைக் கழிப்பதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. ஆனால் பார்வதி இதை மறுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தாம் அடுத்து நடிக்கும் படங்கள் குறித்து விரைவில் தகவல்களை வெளியிட உள்ளாராம்.