‘கோட்’ படத்தில் விஜய் பாடிய இரு பாடல்கள்

‘கோட்’ படத்தில் விஜய் பாடிய இரு பாடல்கள்

1 mins read
002fd9d9-4b15-47c0-b43b-4069c90639af
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் தனது பெற்றோரைச் சந்தித்துப் பேசியுள்ளார் விஜய். - படம்: ஊடகம்

முதன்முறையாக தனது படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார் விஜய்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடித்து வரும் ‘கோட்’ திரைப்படத்தில்தான் இவ்விரு பாடல்களும் இடம்பெற உள்ளன.

யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் பாடல்கள் இளையர்களிடம் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்கிறது யுவன் தரப்பு.

இதற்கு முன்பு வெளியான ‘பெரியண்ணா’ என்ற படத்தில் விஜய் பாடிய மூன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

அந்தப் படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்க, விஜயகாந்தும் சூர்யாவும் நடித்திருந்தனர்.

‘கோட்’ படத்தின் அனைத்துப் பாடல்களும் எப்போது வெளியாகும் எனும் ஆவலுடன் ரசிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்