விஜய்தான் தமிழில் தமக்குப் பிடித்தமான நடிகர் என்று இந்தியக் கிரிக்கெட் வீரர் யாதவ் தெரிவித்துள்ளார்.
விஜய் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் தமக்கு மிகவும் பிடிக்கும் என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“விஜய் நடிப்பில், சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களை விரும்பிப் பார்ப்பேன். கல்லூரியில் படிக்கும்போது அவரது படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்த்து ரசிப்பேன்,” என்கிறார் சூர்யகுமார்.
இதையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சூர்யகுமார் சிறந்த வீரர் என்றும் சமூக ஊடகங்களில் பாராட்டி உள்ளனர்.

