சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் அஞ்சலி.
வரும் மே 31ஆம் தேதி வெளியீடு காண உள்ள இப்படத்தில் தானும் ஒரு நாயகிதான் என்கிறார்.
அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய அவர், சங்கர் இயக்கத்தில் நடிப்பது பெருமைக்குரியது என்றார்.
“இப்படம் குறித்து ரசிகர்கள் பல்வேறு கேள்வி எழுப்பி வருகிறார்கள். முக்கியமான தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக உள்ளனர்.
“எனினும் எந்தவிதமான தகவல்களும் கசிந்துவிடக் கூடாது என இயக்குநரும் தயாரிப்பாளர்களும் கூறிவிட்டனர். எனவே அவர்கள்தான் எதையும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்,” என்கிறார் அஞ்சலி.
தற்போது, ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தில் நடித்துள்ளதாகவும் அப்படம் ஜுலை மாதம் வெளியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

