ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு, திரைப்படங்கள் கோடிக்கணக்கான ரசிகர்களைச் சென்றடைவதாகச் சொல்கிறார் நடிகர் ஹிப்ஹாப் ஆதி.
அதேசமயம் ஓடிடி தளங்கள் வந்த பிறகு திரையரங்கு சென்று படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பின்போது கவலை தெரிவித்தார்.
“பல ஓடிடி தளங்கள் புதுப்படங்கள் தொடர்பாக பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கின்றன. இதனால் மூலை முடுக்குகளில் உள்ள ரசிகர்களை திரைப்படங்கள் சென்றடைகின்றன.
“அதேசமயம் இளையர்கள் மத்தியில் திரையரங்குக்கு செல்லும் ஆர்வம் குறைவது திரையுலகின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. சில ஆண்டுகளுக்குப் பிறகே ஓடிடி தளங்களின் தாக்கம் குறித்து தெளிவான முடிவுக்கு வர இயலும்,” என்கிறார் ஆதி.