தமக்கு கவனக்குறைவு, அதிக செயல்பாடு கோளாறு இருப்பதாகவும் அதை மருத்துவர்கள் அண்மையில் கண்டறிந்ததாகவும் கூறியுள்ளார் பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில்.
இது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு என்றும் மூளையின் கவனம், நடத்தை, உந்துவிசைக் கட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறனைப் பாதிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
“குழந்தைகள் இப்பிரச்சினையால் பாதிக்கப்படுவது வழக்கம். சிறு வயதிலேயே நோய் தாக்கத்தைக் கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம்.
“எனக்கு தற்போது 41 வயதாகிறது. எனக்குள்ள பிரச்சினையை தீர்க்க முடியுமா என மருத்துவர்களிடம் கேட்டுள்ளேன்,” என்கிறார் ஃபகத் ஃபாசில்.

