நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் தாய்லாந்தில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
வரலட்சுமிக்கும் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ்வுக்கும் அண்மையில் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதன் பின்னர் இருவரும் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில், இருவருக்கும் ஜூலை 2ஆம் தேதி தாய்லாந்தில் திருமணம் நடைபெற உள்ளது.
மேலும், திருமணத்துக்கு முந்தைய நாள் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் மணமகளுக்கான மெஹந்தி (மருதாணி) நிகழ்ச்சியும் திருமண வரவேற்பு நிகழ்வும் நடைபெறுகிறது.

