பிரதீப் ரங்கநாதன் படத்தில் இணையும் மமிதா பைஜு

பிரதீப் ரங்கநாதன் படத்தில் இணையும் மமிதா பைஜு

1 mins read
4b977763-c9c6-48eb-8c43-ad6e703118a2
மமிதா பைஜு. - படம்: ஊடகம்

‘லவ் டுடே’ படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, தமிழில் ‘எல்ஐசி’, ‘டிராகன்’ ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.

இந்நிலையில் அவர் தெலுங்குப் படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதை கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார்.

இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மமிதா பைஜு நாயகியாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அதன் பின்னர் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் இந்தி, தென்னிந்திய மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியீடு காணும் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்