தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘இந்தியன் 2’ படத்துக்குப் போட்டியாக ஜூலையில் வெளியாகும் ‘வணங்கான்’

1 mins read
c1b12fce-cb50-4ab2-ba17-dd8552de6e95
‘வணங்கான்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள ‘வணங்கான்’ படம், ஜூலை மாதம் வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில்தான் சங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படமும் வெளியீடு காண உள்ளது.

வணங்கான் படத்தில் முதலில் சூர்யா நாயகனாக ஒப்பந்தமானார். எனினும் படப்பிடிப்பு தொடங்கிய ஒரு மாதத்துக்குள் அதிலிருந்து விலகுவதாக சூர்யா அறிவித்தார். அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து, சூர்யாவுக்குப் பதிலாக அருண் விஜய் இப்படத்தில் ஒப்பந்தமானார்.

தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்பப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் பாலா.

இம்முறையும் அவர் மாறுபட்ட கதைக்களத்துடன் களமிறங்கி உள்ளதாகவும் அருண் விஜய்க்கு இப்படம் முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், சங்கர் இயக்கும் படத்துடன் நேருக்கு நேர் மோதுவது ‘வணங்கான்’ படத்தின் வசூலைப் பாதிக்கும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இதையடுத்து, ‘இந்தியன் 2’ படம் வெளியாகும் முன்பு, அல்லது வெளியான பிறகு ‘வணங்கான்’ படம் திரைக்கு வருவது நல்லது என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்