இந்திய அளவில் அதிக ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகைகளில் ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர். அண்மையில், அவர் நடித்து வெளியான ‘அனிமல்’ படம் படுமோசமான விமர்சனங்களைச் சந்தித்தாலும் ராஷ்மிகாவுக்கு ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது. அதன்படி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க அவர் ஒப்பந்தமாகி உள்ளார்.
மேலும், அவர் தெலுங்கில் நடித்துவரும் ‘புஷ்பா 2’ படத்திலிருந்து நடன காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பரவலானது. இந்நிலையில், “நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசும்போது நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் பேசுவதில்லை. ஆங்கிலத்தில் பேசினால் எல்லோருக்கும் புரியும் ராஷ்மிகா,” என ரசிகர் ஒருவர் டுவிட்டரில் கூறயிருந்தார்.
“ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கிறேன். ஆனால் நான் அவர்களது மொழியில் பேசவில்லை என்றால், மொழியை அவமானப்படுத்தியதாக அவர்கள் நினைப்பார்கள் அல்லது மொழியே தெரியாமல் நடித்தேன் என விமர்சிப்பார்கள்,” என அந்த ரசிகரின் கேள்விக்குப் பதிலளித்திருந்தார் ராஷ்மிகா.
“அதனால்தான் ஆங்கிலத்தில் பேசாமல் அந்தந்த மொழிகளில் நடிக்கும்போது அதே மொழியில் பேசுகிறேன்,” என்றார் அவர்.