தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி: வைகைப் புயல் வடிவேலு

1 mins read
f726139c-c260-4914-a5d7-3571007cd7d1
வைகைப் புயல் வடிவேலு. - படம்: ஊடகம்

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கொடி கட்டிப்பறந்தவர் வைகைப் புயல் வடிவேலு. ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தின் 2ஆம் பாகத்தில் நடிக்க மறுத்ததால் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் பிரச்சினைகள் முடிந்து ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார் வடிவேலு. ‘மாமன்னன்’ படத்தில் அவருடைய நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன.

இந்நிலையில், “திரைப்பட வாழ்க்கையில் நடிகர் ராஜ்கிரண்தான் எனக்கு தெய்வம். அவர்தான் எனக்குள் இருக்கும் திறமையை அறிந்து படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். என்னுடைய வாழ்க்கையில் நிறைய விமர்சனங்களை நான் எதிர்கொண்டேன்,” என்று தனது திரைப்பட அனுபவங்கள் குறித்து நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் நடிகர் வடிவேலு பகிர்ந்துகொண்டார்.

மேலும், “கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி. இதை கமல்ஹாசனிடம் சொன்னபோது, இதுமாதிரி நிறைய வரும். அதை தாண்டி நடித்து முன்னேற வேண்டும் என்றார். நான் மீண்டும் நடிக்க வந்ததும் என்னை விமர்சனம் செய்தவர்கள் யாரையும் காணவில்லை. தொழிலை நேசித்து செய்தால் தோற்க மாட்டோம்,” என்றார் வடிவேலு.

குறிப்புச் சொற்கள்